கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே கிறிஸ்து இயேசுவின் நாமத்தினாலே கிருபையும் சமாதானமும் நமக்குள் பெருகட்டும்.

வேதம் சொல்கிறது..

21 அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும், பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
மத்தேயு 19:21

22 அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.
மத்தேயு 19:22

இன்றும் நமக்குள் கிறிஸ்து இயேசுவுக்காய் விடமுடியாத ஆஸ்தி ,செல்வம் நம்மை நெருக்கி கொண்டு இருக்க முடியும். என் தகப்பனுக்கு நான் ஊழியம் செய்து கொண்டு எனக்கு பிரியமான காரியங்களை செய்து எனது மாம்சத்தை திருப்தி படுத்திக் கொண்டு தகப்பனை மறுதலித்து ஊழியம் செய்கின்றோமா???

வேதத்தில் சொல்கிறது போல் கடைசி நாட்களில் தகப்பனே உமக்காக உம்முடைய நாமத்தில் அற்புதம் செய்தோம் என்று சொன்னாலும் நான் உங்களை அறியேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் வாசிக்கிறோம் அல்லவா!

பிரியமானவர்களே கிறிஸ்து இயேசு தனக்கு பிரியமானதை பிதாவுக்கு செய்து விட்டு ஊழியம் செய்து விட்டேன்,பிதாவின் சித்தத்தை நிறைவேற்றிவிட்டேன் என்று வேதத்தில் சொல்வது உண்டானால் நீங்களும் அவ்வாறு ஊழியம் செய்ய முடியும்.

ஆனால் நம் தகப்பனாகிய கிறிஸ்து இயேசுவோ பிதாவின் சொற்படிக் கேட்டு அவருடைய நோக்கத்துக்காய் தான் ஜீவனையும் இழந்தார் அல்லவா??

ஆகவே கிறிஸ்து இயேசுவுக்குள் ஊழியம் செய்ய வாஞ்சிக்கிறவர்கள் கர்த்தரின் சத்தத்துக்குக் கீழ்ப்படிந்து அவர் நோக்கத்துக்காய் எதையும் இழக்க ஆயத்தமாவோம்.

கிறிஸ்து இயேசு தாமே நம்மை இன்னும் ஆவியிலே பெலப்படுத்துவாராக.

சேர்ந்து ஜெபிப்போம்.
அன்பின் தகப்பனே உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள் உம்முடைய சித்தத்தை அறிந்து அதற்காய் செயற்பட எங்கள் செவிகளை திறந்தருளும்.எங்கள் நாம மகிமைக்காய் அல்ல உம்முடைய நாம மகிமை ஒன்றே காணப்பட எங்களை பயன்படுத்தும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே.
ஆமேன்..

இந்த வார்த்தை அப்பா தன் பிள்ளைகளுக்கு சொல்லச்சொன்னதைக் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் அவருடைய சமூகத்தில் நின்று சொல்கிறேன். ஆமேன்.