ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அடுப்பில் வைக்கும் போது அதிலொரு தவளை இடறி விழுந்தது. அந்த தவளைக்கு ஐயோ என்ன ஒரு அருமையான சுகம் என்று தன் மனதில் சிந்தித்து கொண்டு மீண்டும் அந்த நீரில் நீந்தி கொண்டிருந்தது. சில நேரம் கழித்து நீர் மெதுவாக சூடாகியது. தவளைக்கு அந்த மாற்றம் இன்னும் சுகமாக இருந்தது. இவ்வாறு நீரின் சூடு மெது மெதுவாக சூடாக தவளை ஐயோ இந்த சூடு கொஞ்சம் கொஞ்சமாக கூடுதே, நாம இந்த இடத்தை தாண்டி போய் விடுவோம் என்று எண்ணியது மாத்திரம் தான் மீண்டும் இன்னும் கொஞ்சம் நேரம் இருப்பம் , இது நமக்கு சந்தோசமாதான் இருக்கு சிறிது நேரம் கழித்து போகலாம் என்று எண்ணியது. ஆனால் நீரின் வெப்பநிலை வேகமாக அதி்கரிக்க தொடங்க தவளையால் தாங்க முடியாத நிலை வந்தது. தப்பிக்க நினைத்து அந்த பாத்திரத்திலிருந்நு வெளியே வர முயற்சித்தது, ஆனால் நீரின் வெப்பம் தவளையின் வலிமையை பறித்துக் கொண்டது. ஆகவே தவளையால் தப்பிக்க முடியாமல் மரித்து விட்டது.
ஆகவே கிறிஸ்த்துவுக்குள் பிரியமானவர்களே இன்றும் பாவத்தின் சிறையிருப்பில் நாம் சிக்கப்பட்டிருக்க கூடும். அது நமக்கு ஆரம்பத்தில் இன்பமாக இருக்கும் அதிலிருந்து வெளியே வர யோசிக்காது மகிழ்ச்சியாய் நாமும் அதில் வாழ கூடும். காலம் செல்ல அது நம்மை நெருக்கும் போது நாம் அதிலிருந்து வெளியே வர யோசித்தும் விடுபட முடியாமல் வாழ கூடும். இறுதியாக அந்த பாவம் நம்மை முழுமையாய் ஆளுகை செய்து நம்மை பற்றி நம் உயிரை பறிக்கும் நேரத்தில் நாம் வெளியே வர எத்தனிக்கும் போது அப் பாவம் நம் வலிமை முழுவதையும் பறித்து நம்மை மரணத்துக்கு கொண்டு போய் விடும்.
நம் தகப்பனாகிய இயேசு கிறிஸ்து நம்மை பாவத்தின் சேற்றிலிருந்து துக்கிவிட தன் கரத்தை நீட்டி அழைத்து கொண்டு இருக்கிறார்.
சற்றும் தாமதிக்காமல் அவர் கரத்தை இன்றே பற்றி கொள்வோமா?
நமக்காக ஜெபிக்க போகிறோம்.
அன்பின் தகப்பனே இந்த வேளை யார் யார் இந்த சூழ்நிலைகளில் இருக்கிறார்களோ இயேசுவின் நாமத்தில் அதிகாரத்தோடும் விசுவாசத்தோடும் ஜெபிக்கிறோம், இயேசுவின் நாமத்தில் அவர்கள் சிறையிருப்பு அடிமைத்தனத்தின்சங்கிலி முறிவதாக ,இயேசுவின் நாமத்தில் விடுதலை அடைவீர்களாக.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமேன்.
