கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
நம் தகப்பனாகிய தேவன் உங்களிற்கு நினைப்பூட்ட சொல்கிறதான காரியம் கிருபையை வீண் விரயம் ஆக்காதீர்கள்.
இக் காலத்திலே துணிகரமாக பாவம் செய்து கொண்டு கிருபையை சொல்லி சொல்லியே மீண்டும் பாவம் செய்கின்றோம். வேதம் சொல்கிறது “பரிசுத்தம் இல்லாமல் தேவனை ஒரு போதும் தரிசிக்க முடியாது (எபிரெயர் 1214)”. நம் அடிமைத்தனமாகிய பாவங்களை இன்றே விட்டுவிடுங்கள்.
விட்டு விட முடியாமல் தவிக்கிறீர்களா? அது உங்களிற்கு பலவீனமாக இருக்கின்றதா?
வேதம் சொல்கிறது “உன் பெலவீனத்திலே என் பெலன் பூரணமாய் விளங்கும்(2 கொரி 12:9)” என்று. ஆகவே உங்கள் பெலவீனங்களிலே நம் தேவன் பூரணமாய் கிரியை செய்கிறதினாலே அவரை ஸ்தோஸ்தரியுங்கள்.
பாவம் செய்ய உங்களை உங்கள் சிந்தனை தூண்டும் போது உங்கள் மாம்சத்தை விட்டு கொடுக்காமல் நீங்கள் நிற்கும் இடத்தை விட்டு ஓடி விடுங்கள். வேதத்திலே யோசேப்பு சொல்கிறார் “என் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்வது எப்படி (ஆதியாகமம் 39:9)” என்று…
இன்றே உங்கள் பெலவீனங்களை தேவனிடம் விட்டுக் கொடுப்பீர்களா?
இந்த தேவ செய்தி ஊடாக அப்பா உங்களுடன் பேசினால் தேவனுடைய நாம மகிமைக்கே உங்கள் சாட்சியை எங்களிற்கு தெரிவியுங்கள்.
தேவனுடைய நாமமே மகிமைப்படுதவாக.
ஆமென்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
