ஆதி 1 : 2 ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
ஏன் தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருக்க வேண்டும்…….? ஆழத்தில் அசைவாடிருக்கலாமே…………..?
ஏனேனின் ஆழத்தில் இருள் இருந்தது..
2 கொரி 6:14 ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? என்ற பிரகாரம் தேவ ஆவியானவர் இருளில் அசைவாடாமல் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்.
இயேசு கிறிஸ்து தேவ ஆவியானவர் நம்முள் கிரியை செய்ய வேண்டும் என்பதற்காக மத் 4:15 இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, இந்த வார்த்தையின் படி இருளில் இருந்த நம்மை ஒளியினிடத்திற்கு கொண்டு வந்தார்.
அப்போது தான் பிதா சொன்ன வாக்கு தத்தம் யோவே 2:28 மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்ற வாக்கு தத்தம் நிறைவேற்றப்படும்.
இதன் பிரகாரம் கிறிஸ்து பரத்துக்கு ஏறிய பின் பரிசுத்த ஆவியானவர் ஒளியிலிருந்த 120 பது பேர் மேல் தன் ஆவியை ஊற்றினார். இதை அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் நாம் காண்கிறோம்.
இன்று நீ அந்த அபிஷேகத்தை பெற வேண்டுமா ?….. நீ ஒன்றே ஒன்று தான் செய்ய வேண்டும்.
யேவான் 1:4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.அந்த கிறிஸ்து இயேசுவை நீ ஏற்றுக்கொண்டு நீ ஒளியினிடத்தில் வரும் போது. உன் ஆத்துமாவுக்கு வெளியாள் அதாவது மாம்சத்துக்கு மேல் அசைவாடிய ஆவியானவர். வெளி 3:20 இன் படி உனக்குள் தங்கியிருப்பார்…..
அவர் உன்னை ஒரு யோசுவாவைப்போல் ஒரு கிதியோனைப்போல் பேதுருவைப்போல் பவுலைப்போல் உன்னையும் உலகத்தை கலக்கிறவர்களாய் மாற்றுவார் …
அதற்கு நீ ஆயத்தமா?
