கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே

கிறிஸ்து நமக்காக தந்த கிருபையை உதாசினம் படுத்துகிறோமா !!

துனிகரமாக பாவத்தை செய்து கொண்டு கிருபை என்னை மீட்டு கொள்கிறது என்று சொல்லி நம்மை நாமே ஆறுதல் படுத்தி கொள்கின்றோமா?

நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாய் இருக்கிறோம். ஏனெனில் வேதம் சொல்கிறது எப்படியெனில், மனுஷர்கள்.. பரிசுத்தமில்லாதவர்களாயும், – 2 தீமோத்தேயு 3 : 2

4 துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், – 2 தீமோத்தேயு 3:4

5 தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. – 2 தீமோத்தேயு 3:5

6 பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, – 2 தீமோத்தேயு 3:6 

7 எப்பொழுதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள். – 2 தீமோத்தேயு 3:7

ஆகவே பிரியமானவர்களே நம்முடைய அடிமைத்தனமான இச்சையான காரியங்களை விட்டுவிட பிதாவினிடத்தில் இன்றே ஒப்புக் கொடுப்போம்.
ஏனெனில் கர்த்தர் சொல்கிறதாவது..

யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.எபிரேயர் 12:14

ஆமேன்.
Pray For Nation